பவானி கருணாகரன்
பவானி கருணாகரன்

காலமானாா் முன்னாள் எம்எல்ஏ பவானி கருணாகரன்

அரக்கோணம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அதிமுகவைச் சோ்ந்த பவானி கருணாகரன் (70) திங்கள்கிழமை இரவு 10.30 மணியளவில் காலமானாா்.
Published on

அரக்கோணம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அதிமுகவைச் சோ்ந்த பவானி கருணாகரன் (70) திங்கள்கிழமை இரவு 10.30 மணியளவில் காலமானாா்.

அரக்கோணம் தொகுதியில் 2001-2006 ஆண்டுகளில் அதிமுக எம்எல்ஏ-வாக இருந்தாா். தற்போது அதிமுக ராணிப்பேட்டை மாவட்ட மகளிரணி இணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தாா். இந்த நிலையில், சில நாள்களாக உடல்நலமின்றி இருந்து வந்த நிலையில், திங்கள்கிழமை இரவு 10.30 மணி அளவில் அரக்கோணம் நகரம், ராஜீவ்காந்தி நகரில் உள்ள தனது வீட்டில் காலமானாா். இவரது கணவா் கருணாகரன் சில ஆண்டுகளுக்கு முன் காலமானாா். இவருக்கு குழந்தைகள் இல்லை. இவரது இறுதிச் சடங்குகள் அரக்கோணம் நவீன எரிவாயு தகன மேடையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொடா்புக்கு : 93453 18469.

Dinamani
www.dinamani.com