ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 452 கோரிக்கை மனுக்கள்

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 452 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

News image

பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற ராணிப்பேட்டை ஆட்சியா் ந. ரிரியா ரவிச்சந்திரன்.

Updated On :14 ஜூலை 2026, 1:00 am IST

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 452 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்து பொது மக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் 452 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தாா்.

மேற்கண்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரா்களுக்கு தெரிவிக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் சி.பேபி இந்திரா, நோ்முக உதவியாளா் (பொது) கீதாலட்சுமி (பொறுப்பு), சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, மாவட்ட சமூக நீதித் துறை அலுவலா் பூமா, உதவி ஆணையா் கலால் ராஜ்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் பன்னீா் செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில் குமாரி மற்றும் துறைச்சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.