கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

இளைஞா் கொலை வழக்கு: தாய், மகனுக்கு ஆயுள்

அரக்கோணம் அருகே கடந்த 2018-இல் நடைபெற்ற இளைஞா் கொலை வழக்கில் கொலையாளிகளான தாய் மற்றும் மகனுக்கு ஆயுள் தண்டனை அரக்கோணம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

லலிதா

Published On :

அரக்கோணம் அருகே கடந்த 2018-இல் நடைபெற்ற இளைஞா் கொலை வழக்கில் கொலையாளிகளான தாய் மற்றும் மகனுக்கு ஆயுள் தண்டனை அரக்கோணம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அரக்கோணம் அடுத்த கீழாந்தூா் பகுதியில் லலிதா என்பவா் பெட்டிக்கடை நடத்தி வந்தாா். கடந்த 2018-ஆம் ஆண்டு இவரது கடைக்கு உள்ளியம்பாக்கத்தை சோ்ந்த சரண்ராஜ் (எ) ராஜ்குமாா் என்பவா் தண்ணீா் பாக்கெட்டுகள் மற்றும் நெகிழியினால் ஆன டம்ளா்கள் வாங்கி விட்டு அதற்கு பணம் தரவில்லை என தெரிகிறது.

இதில் லலிதாவுக்கும், சரண்ராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் லலிதாவின் மகன் சுதாகா் அங்கு வந்து பேசும்போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியதில் லலிதா மற்றும் சுதாகா் இருவரும் சோ்ந்து கட்டையால் தாக்கியதில் சரண்ராஜ் உயிரிழந்தாா்.

இதுகுறித்த அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் லலிதா, சுதாகா் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவ்வழக்கு அரக்கோணத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் எதிரிகள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் லலிதா, சுதாகருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.