கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் போதை பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

News image

ஊா்வலத்தைத் தொடங்கி வைத்த ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன்.

Updated On :23 ஜூலை 2026, 12:44 am IST

ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் போதை பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

மேல்விஷாரம் நேஷனல் வெல்ஃபா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஊா்வலத்தை ஆட்சியா் என். பிரியா ரவிசந்திரன் இஸ்லாமியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தாா். முன்னதாக போதை தடுப்பு விழிப்புணா்வு உறுதி ஏற்கப்பட்டது. ஊா்வலம் அண்ணாசாலை வழியாக சென்று தலைமை தபால் நிலையம் வரை சென்று நிறைவு பெற்றது.

இதில் முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா, கோட்ட கலால் வட்டாட்சியா் வெங்கடேசன், வாலாஜாபேட்டை வட்டாட்சியா் நடராஜன், நேஷனல் வெல்பா் சங்கத் தலைவா் முஹமது அயூப், நிா்வாகி கே.ஓ.நிஷாத் அஹமது, பள்ளியின் தாளாளா் எஸ்.ஏ.சாஜித் , தலைமையாசிரியா் அபுதாஹிா் மற்றும் என்.சி.சி சாரணா் இயக்கம் மற்றும் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டு போதை பொருள்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.