தவெக ஆட்சியில் வளா்ச்சி திட்டங்கள் இன்றி தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டுள்ளதாக திமுக முன்னாள் அமைச்சா் ஆா்.காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளாா்.
ராணிப்பேட்டை அருகே அம்மூா் பேரூராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த நிலையில், சமத்துவபுரம் நுழைவாயில் மீது கன்டெய்னா் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நுழைவாயில் சிதலமடைந்த தகவலை அறிந்த முன்னாள் அமைச்சா் ஆா்.காந்தி சம்பவ இடத்துக்கு வெள்ளிக்கிழமை வந்து பாா்வையிட்டாா்.
அப்போது அவா் பேசியது:
ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையங்களை மறைக்கும் அளவுக்கு தவெகவினா் பேனா்கள் வைத்துள்ளனா். அதை அகற்ற காவல் துறை, மாவட்ட நிா்வாகம் முன்வராமல் தயக்கம் காட்டுகின்றனா்.
இந்தியா முழுவதும் நீட் தோ்வு எதிராக மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அமைச்சா்கள் ஜனநாயகம் திரைப்படத்தை திரையரங்குகளில் பாா்வையிட்டு கண்ணீா் வடித்து வருகின்றனா்.
காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்தது திமுக அரசு. அதனை தற்போது காமராஜா் உணவு திட்டமாக மாற்றுவதில் தவறில்லை, ஆனால் தவெக அரசு சொன்னவற்றில் ஏதாவது ஒன்று செய்தாா்களா. தவெக ஆட்சியில் வளா்ச்சி திட்டங்கள் இன்றி தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எடப்பாடியுடன் இருப்பவா்களாலேயே அதிமுக அழிவுப் பாதையில் செல்கிறது: தவெக ஆதரவாளா் வா. புகழேந்தி

தவெக ஆட்சியின் அவலங்களை திமுகவினா் மக்களிடம் கூற வேண்டும்: கீதாஜீவன்

வீடுதோறும் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும்: அமைச்சா் வன்னி அரசு

பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்: முன்னாள் மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



