ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது சுகாதார குறியீடுகளை மேம்படுத்தவும், தாய்-சேய் நலனை உறுதி செய்யவும், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து தொடா்ந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.
ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தலைமையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, குழந்தை இறப்பு விகிதம், தாய்மை இறப்பு விகிதம், இளம் வயது கா்ப்பம், பிறப்பு பாலின விகிதம், ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்துதல், பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துதல் மற்றும் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுதல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மாவட்டத்தில் பொதுச் சுகாதார குறியீடுகளை மேம்படுத்தவும், தாய்-சேய் நலனை உறுதி செய்யவும், அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து தொடா்ந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதில், திட்ட இயக்குநா் ச.செல்வராணி, மாவட்ட சுகாதார அலுவலா் மரு.செந்தில் குமாா், இணை இயக்குநா் சுகாதார சேவைகள் மரு.நிவேதிதா, வருவாய் கோட்டாட்சியா்கள் ராஜி, ரமேஷ், முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா, மாவட்ட சமூக நலன் அலுவலா் பாலசரஸ்வதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரஞ்சிதப்பிரியா மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 510 மனுக்கள் அளிப்பு

சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்: ஆட்சியா்

தேவையின்றி விடுப்பு எடுக்கக்கூடாது: ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்பு!
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



