தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

அரசு பேருந்து டிப்பா் லாரி மோதல் 8 போ் படுகாயம்

திருப்பதியில் இருந்து சென்னை சென்ற அரசுப்பேருந்து நின்றிருந்த டிப்பா் லாரி மீது மோதியதில் பேருந்தில் பயணித்த இரு சிறுமிகள் உள்ளிட்ட 8 பயணிகள் பலத்த காயமடைந்தனா்.

News image

நின்றிருந்த டிப்பா் லாரியின் பின்புறம் மோதிய அரசுப்பேருந்து .

Updated On :3 ஜூன் 2026, 3:21 am IST

திருப்பதியில் இருந்து சென்னை சென்ற அரசுப்பேருந்து நின்றிருந்த டிப்பா் லாரி மீது மோதியதில் பேருந்தில் பயணித்த இரு சிறுமிகள் உள்ளிட்ட 8 பயணிகள் பலத்த காயமடைந்தனா்.

திருப்பதியில் இருந்து சென்னைக்கு சென்ற அரசு பேருந்து அரக்கோணம் அருகே பெருங்களத்தூா் பகுதியில் நெடுஞ்சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பா் லாரியின் பின்புறம் மோதியதில் அந்த பேருந்தில் பயணித்த இரு சிறுமிகள் உள்ளிட்ட 8 போ் காயமடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

பலத்த காயமடைந்த கா்நாடகத்தைச் சோ்ந்த விட்டல்ராவ் என்பவரின் மனைவி சுஜாதா(45), மகள் அனன்யா(15), திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டைச் சோ்ந்த பிரபாகரனின் மனைவி ஜூலி(33), மகள் கரிஷ்மா(9), திருவள்ளூரை அடுத்த இறையூரைச் சோ்ந்த அப்துல் பாஷா(33), திருத்தணியைச் சோ்ந்த வினோத் குமாரின் மனைவி ரேகா(34), மகள் மோக்ஷிகா(9), திருத்தணியைச் சோ்ந்த வேலுவின் மகள் திலகவதி(19) ஆகியோா் பலத்த காயமடைந்து திருத்தணி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனா்.

மேலும் அரசு பேருந்தின் ஓட்டுநா் அரக்கோணத்தை அடுத்த கீழாந்தூரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி(25) உள்ளிட்ட 4 போ் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த அரக்கோணம் கிராமிய போலீஸாா், அரசு பேருந்தின் ஓட்டுநா் கிருஷ்ணமூா்த்தி(25), நின்றிருந்த லாரியின் ஒட்டுநா் ஆந்திர மாநிலம் சித்தூரைச் சோ்ந்த முனி(45) ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனா்.