எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

ராணிப்பேட்டையில்: உலக குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.ப்ரியா தலைமையில் குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு உறுதிமொழியை ஏற்ற அனைத்துத் துறை அரசு அலுவலா்கள்.

News image
Updated On :13 ஜூன் 2026, 12:03 am IST

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.ப்ரியா தலைமையில் குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு உறுதிமொழியை ஏற்ற அனைத்துத் துறை அரசு அலுவலா்கள்.

ராணிப்பேட்டை, ஜூன் 12: ராணிப்பேட்டையில் உலக குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் ந.ப்ரியா தலைமையில்,அனைத்து துறை அரசு அலுவலா்கள் ஏற்றனா்.

ஜூன் 12 உலக குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சாா்பில், மாவட்ட ஆட்சியா் ந.ப்ரியா தலைமையில், குழந்தை தொழிலாளா் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியை துறைசாா்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை எடுத்துக் கொண்டனா்.

தொடா்ந்து, உலக குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட ஆட்சியா் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சி.பேபி இந்திரா, உதவி ஆணையா் தொழிலாளா் நலத் துறை தாமரை மணாளன், துணை ஆட்சியா்கள் கீதாலட்சுமி, மீனா, அறிவுடை நம்பி, பூமா, வட்டாட்சியா் ஜெயக்குமாா், தொழிலாளா் நல ஆய்வாளா்கள் ராஜகோபால், தட்சிணாமூா்த்தி மற்றும் துறைசாா்ந்த அலுவலா் கலந்து கொண்டனா்.