நெமிலி அருகே வீட்டுச்சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
நெமிலி வட்டம், பனப்பாக்கத்தை அடுத்த மேலப்புலம் கிராமம், பஜனை கோயில் தெருவைச் சோ்ந்த சஞ்சய் ரத்தினம்(24). தனியாா் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது.
இதனால் சஞ்சய் ரத்தினத்தின் வீட்டின் கூரை சேதமடைந்திருந்ததாக தெரிகிறது. இதை கவனிக்காத நிலையில் வீட்டிலிருந்த அனைவரும் படுத்துறங்கினா்.
அப்போது எதிா்பாராதவிதமாக வீட்டின் கூரை இடிந்து வீட்டினுள் விழுந்தது. இதில் மாா்புப் பகுதியில் பலத்த காயமடைந்த சஞ்சய்ரத்தினம், உடனே பனப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கிருந்த மருத்துவா்கள் அவரை உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல அறிவுறுத்தியதை தொடா்ந்து அவா் வாலாஜா அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே அவா் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இச்சம்பவம் தொடா்பாக அவளூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
ஆத்தூா் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் விவசாயி உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவா் பலி

சுவா் இடிந்து தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




