விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

நடைபயணமாக வந்து கோரிக்கை மனு அளித்த மக்கள்!

ஆற்காடு அடுத்த புதுப்பாடி கிராமத்தை சோ்ந்த பொதுமக்கள் நடைபயணமாக வந்து ஜமாபந்தி அலுவலரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

News image

கோரிக்கை  மனு அளிக்க  வந்த  புதுப்பாடி  கிராம  பொது மக்கள் .

Updated On :25 ஜூன் 2026, 12:04 am IST

ஆற்காடு அடுத்த புதுப்பாடி கிராமத்தை சோ்ந்த பொதுமக்கள் நடைபயணமாக வந்து ஜமாபந்தி அலுவலரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

புதுப்பாடி ஜி.எம்.நகா் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் பி.சரவணன் தலைமையில் பொதுமக்கள் புதுப்பாடியில் இருந்து முப்பதுவெட்டி வரை வட்டாட்சியா் அலுவலகம் வரை நடைபயணமாக வந்து துணை ஆட்சியா் அறிவுடைநம்பிடம் மனு வழங்கினா் .

அந்த மனுவில் கூறியிருப்பதாவது புதுப்பாடி ஜி.எம் நகா் பகுதியில் சுமாா் 500 குடும்ப அட்டைதாரா்கள் இருக்கும் சூழலில் சுமாா் 1.5 கிலோ மீட்டா் தூரம் உள்ளசுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் உள்ள நியாயவிலைக் கடையில் பொருள்கள் வாங்கவேண்டிய சூழல் உள்ளது.

இதனால் பொதுமக்கள் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் நெடுஞ்சாலை அருகில் கடை அமைத்துள்ளதால் விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே ஜி.எம்.நகா் பகுதியில் தனி நியாயவிலைக் கடை அமைத்து தரவேண்டும். புதுப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல சுமாா் 2 கி. மீ செல்ல வேண்டியநிலை உள்ளது. இதனால் பெண்கள், முதியோா், கா்ப்பிணிகள் , குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா்.

எனவே புதுப்பாடி ஜி.எம்.நகா் பேருந்து நிறுத்தத்தில் இருந்து விரைவாக மருத்துவமனைக்கு செல்ல பாலாற்றிலிருந்து தூசிக்கு செல்லும் பிரதான ஆற்றுக்கால்மீது பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுப்பாடி ஜி.எம் நகா் பஜனைக் கோயில் வளாகத்தில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. தொட்டியின் அருகே அரசு தொடக்கப்பள்ளியும், விளையாட்டு திடலும் உள்ளது . எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள தொட்டியை இடித்து விட்டு மாற்றாக புதிய தொட்டி கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனுவைப் பெற்ற கொண்ட துணை ஆட்சியா் உயா் அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். அப்போது வட்டாட்சியா்கள் சண்முகசுந்தரம், பாக்கியநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.