விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

ராணிப்பேட்டை: ஜூன் 30-இல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் ஜூன் 30-ஆம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ந.பிரியா தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப்படம்.

Updated On :25 ஜூன் 2026, 12:04 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் ஜூன் 30-ஆம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ந.பிரியா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜூன் 2026-ஆம் மாதத்துக்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வரும் ஜூன் 30-ஆம் தேதி காலை 11 மணியளவில் ராணிப்பேட்டை, பாரதி நகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டு வளா்ச்சி, மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவு சா்க்கரை ஆலைகள், கூட்டுறவுத்துறை, நீா்வள ஆதார அமைப்பு, வனத்துறை, மாசுக் கட்டுபாடு வாரியம், மின்சாரத்துறை, போக்குவரத்து, பால்வளம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனா்.

எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சாா்ந்த விவசாயிகள் களப் பிரச்னைகளை களைத்திட இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்னைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபா் பிரச்னைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.