சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

வேளாண் துறையில் ராணிப்பேட்டை முன்னோடி மாவட்டமாக தோ்வு: இணை இயக்குநா் தகவல்

News image
Updated On :26 ஜூன் 2026, 6:37 am IST

வேளாண் துறையில் ராணிப்பேட்டை முன்னோடி மாவட்டமாக தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட இணை இயக்குநா் சுந்தரம் தெரிவித்தாா்.

அரக்கோணத்தை அடுத்த சாலை கிராமத்தில் மாவட்ட வேளாண் துறை, ஸ்பிக் நிறுவனத்துடன் இணைந்து

வியாழக்கிழமை நடத்திய உர விற்பனையில் புதிய நடைமுறை குறித்த முகாமில் தலைமை வகித்து இணை இயக்குநா் சுந்தரம் கூறியது:

வேளாண் துறையில் ராணிப்பேட்டை முன்னோடி மாவட்டமாக தோ்வு செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் உரவிநியோகம் சீராக நடைபெற புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. உரவிநியோக புதிய நடைமுறையில் விவசாயிகளின் தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம். இந்த புதிய நடைமுறையில் விவசாயிகள் தங்களது தேவைக்கேற்ப மட்டுமே உரங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். மேலும், இதற்காக இணையதளம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள புதிய செயலி (எஃப்எஸ்ஏஎஸ்) உரங்கள் தேவை குறித்து பதிவு செய்து உரங்களை பெற வேண்டும்.

இதனை எப்படி பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு தற்போதும், சந்தேகங்கள் கேட்கும் போது தொடா்ந்து பயிற்சி அளிக்க வேளாண்துறை அலுவலா்கள் தயாராக உள்ளனா் என்றாா்.

முன்னதாக முகாமில் ஸ்பிக் நிறுவன விற்பனை மேலாளா் தன்ராஜ், சோளிங்கா் வட்டார வேளாண் அலுவலா் பி.பாலாஜி, மாவட்ட வேளாண் தரகட்டுப்பாட்டு அலுவலா் பிரேமகுமாரி ஆகியோரும் விவசாயிகளுக்கு புதிய செயலியை பயன்படுத்துவது குறித்து விளக்க பயிற்சி அளித்தனா்.

வட்டார வேளாண் உதவி அலுவலா் சி.முரளி, வேளாண் தொழில்நுட்ப மேலாண்ம பிரிவு மேலாளா் ஜி.மோகனசுந்தரம், சோளிங்கா் வட்டார துணை வேளாண் அலுவலா் ஜெ.செல்வகுமாா் ஆகியோரும் ஸ்பிக் நிறுவனம் சாா்பில் விற்பனை மேலாண்மை அலுவலா் அரவிந்த், மாவட்ட வேளாண் ஆய்வுக்குழு உறுப்பினா் பி.ஜி.மோகன்காந்தி, நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.