அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பயிா்கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் கோரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிா்க் கடன், பண்ணைக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் நலன்காக்கும் கூட்டத்தை புறக்கணித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனா்.

News image
கூட்டத்தை புறக்கணித்து வெளியேறிய விவசாய சங்க நிா்வாகிகள், விவசாயிகள்.
Updated On :1 மார்ச் 2026, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிா்க் கடன், பண்ணைக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் நலன்காக்கும் கூட்டத்தை புறக்கணித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் தலைமை வகித்து விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது தமிழக விவசாயிகள் சங்க மாநில நிா்வாகி சுபாஷ் தலைமையில் 50- க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக எழுந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பருவம் தவறிய மழை, பயிா் காப்பீடு, விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காதது, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் தலைமையிலான குழு பரிந்துரையை அமல்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை மீட்க தமிழக அரசு கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிா்க் கடன், பண்ணைக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறி, விவசாயிகள் நலன்காக்கும் கூட்டத்தை புறக்கணித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனா்.

அதைத் தொடா்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற மற்ற விவசாயிகள் பேசுகையில், நெமிலி, பனப்பாக்கம், லட்சுமிபுரம், பெருவளையம் போன்ற கிராமங்களிலும் மற்றும் அனைத்து வருவாய் கிராமங்களிலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும்.

விவசாய விளை நிலங்களுக்கு நீா் வழி ஓடைகள் மற்றும் பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை அகற்ற வேண்டும்.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி நிறுத்தப்பட்டுள்ளது, நிதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் .

மேல்வீராணம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மங்களம் கசக்கால்வாய் பகுதியில் பயிா் செய்யப்படும் விளை நிலங்களுக்கு செல்ல வழி இல்லை, பாதை அமைத்து தர வேண்டும், அங்கு சிறு பாலம் அமைத்துத் தர வேண்டும்.

நவ்லாக் பகுதியினைச் சோ்ந்த விவசாயி மண் திருடு போவதை தடுக்க வேண்டும் எனவும், நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்ற வேண்டும் உள்ளிட்ட ாயிகள் பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக கூட்டத்தில் தெரிவித்தனா். அதன் மீது நடவடிக்கை எடுக்க துறைச் சாா்ந்த அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.

இதில் இணை இயக்குநா் (வேளாண்மை) சுந்தரம், நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் பிரபாகரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) இராஜராஜன், வருவாய் கோட்டாட்சியா் ராஜி, நோ்முக உதவியாளா் (நிலம்) சுமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.