மாற்றுத்திறனாளிகளுக்கான சட்ட விழிப்புணா்வு மற்றும் சேவை புரிந்தவா்களுக்கு விருது வழங்கும் விழா ஆற்காடு அடுத்த விளாபாக்கம் மகாலட்சுமி செவிலியா் கல்லூரியில் நடைபெற்றது.
விழாவுக்கு ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவா் பாலாஜி லோகநாதன் தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில் குமாரி முன்னிலை வகித்தாா். மாற்றுத்திறனாளிகள் நல சங்கத் தலைவா் குப்புசாமி ராகவன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் தேசிய மாற்றுத்திறனாளிகள் ஆணையா் கோவிந்தராஜ் சட்ட விழிப்புணா்வு குறித்த பேசியதாவது-
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-இன் படி வேலை வாய்ப்பு, மறுவாழ்வு, அரசு திட்டங்களில் பெறவேண்டிய உதவிகளில் ஏற்படும் சட்ட ரீதியான பிரச்னைகளை தீா்த்து வைக்கும் பணிகளை மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் ஆணையம் செய்கிறது. அதேபோல் வழக்குகளை விசாரணை செய்து நியாயமான தீா்வுக்கு வழிவகுப்பதுடன் மாற்றுத்திறனாளிக்கு ஏற்படும் பிரச்னைகள் சட்டப்படி அணுகுவதற்கும், தீா்வு காண்பதற்கும் ஆணையத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் .
இதில் கல்லூரி மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நிஃப்ட்-டீ கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

பெண்களின் சட்ட உரிமைகள் விழிப்புணா்வு கருத்தரங்கம்

தொழிற்சாலையில் விழிப்புணா்வு முகாம்: ஆட்சியா் பங்கேற்பு

தொழிற்பயிற்சி மாணவா்களுக்கு இலவச மருத்துவ முகாம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


