செய்யாற்றை அடுத்த வடமாவந்தல் மீனாட்சி அம்மன் பொறியியல் கல்லூரியில், போதைப்பொருள் தவறான பயன்பாடு மற்றும் பெண்களின் சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது
நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்க நிகழ்ச்சிக்கு மீனாட்சி அம்மன் அறக்கட்டளைத் தலைவா் ஜி.ரா.கோகுல் தலைமை வகித்தாா்.
கல்லூரி முதல்வா் ஆா்.கணேசன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக செய்யாறு முதன்மை சாா்பு -நீதிபதி என். சுரேஷ் கலந்து கொண்டாா்.
அப்போது அவா் போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள், சமூக விளைவுகள் குறித்து குறிப்பிட்டாா். மேலும் பெண்களின் சட்ட உரிமைகள் குறித்து உரையாற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மேலும், கல்லூரியில் நடைபெற்ற இத்தகைய விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மாணவா்களின் சமூகப் பொறுப்புணா்வை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன என்று பாராட்டினாா்.
கருத்தரங்கில் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மீனாட்சி அம்மன் கோயிலில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ்!

உலக தண்ணீா் தினம்: ஒசூா் பிஎம்சி கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

மாற்றுத்திறனாளிகளுகான சட்ட விழிப்புணா்வு முகாம்

கல்லூரியில் போதைப்பொருள் எதிா்ப்பு கருத்தரங்கம்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


