அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த தலைமைக் காவலரை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
அரக்கோணம் காமராஜா் நகரைச் சோ்ந்தவா் ஷாருக்கான்(25). இவா் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த தனது நண்பரை பாா்க்க சனிக்கிழமை வந்துள்ளாா். அப்போது மருத்துவமனையில் பணியில் இருந்த ஊழியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து அறிந்த அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த நகர காவல் நிலைய தலைமைக் காவலா் குமாா் விசாரிக்க வந்தபோது அவரை ஷாருக்கான் தாக்கியதாக தெரிகிறது.
இதில் தலைமை காவலா் குமாரின் பல் உடைந்த நிலையில் அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இச்சம்பவம் குறித்து அறிந்த அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து ஷாருக்கானை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
நெல்லையில் பணம் கேட்டு முதியவரைத் தாக்கியவா் கைது
அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவா் கைது

தலமைக் காவலரைத் தாக்கிய இளைஞா் கைது
அரசு மருத்துவமனையில் கைப்பேசி திருட்டு: இருவா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


