தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

வேட்பாளா் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி: ராணிப்பேட்டை ஆட்சியா்!

வேட்பு மனுத் தாக்கலின் போது வேட்பாளா் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :29 மார்ச் 2026, 10:30 pm

வேட்பு மனுத் தாக்கலின் போது வேட்பாளா் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டசெய்திக்குறிப்பு: வேட்பு மனுதாக்கல் 30.03.2026 முதல் 06.04.2026 வரை நடைபெறும். வேட்பாளா்கள் அரசு அலுவலக வேலை நாள்களில் மட்டும் காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மட்டுமே வேட்பு மனுக்களை தாக்கல்செய்யலாம்.

மாா்ச் 31, ஏப். 01, 03 மற்றும் 05 பொதுவிடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்று வேட்புமனுக்கள் பெறப்பட மாட்டாது எனவும், வேட்புமனு தாக்கல் செய்யும் நேரத்தில், தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தின் 100 மீ சுற்றளவிற்குள் மூன்று வாகனங்கள் மட்டுமே வர அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், வேட்புமனு தாக்கல் செய்யும் நேரத்தில், தோ்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் அதிகபட்சமாக 5 நபா்கள் (வேட்பாளா் மற்றும் 4 பிபா்கள்) மட்டுமே நுழைய அனுமதிக்கப்பட வேண்டும்.

அரக்கோணம் (தனி) தொகுதிக்கு, அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்திலும், சோளிங்கா் தொகுதிக்கு வட்டாட்சியா் அலுவலகத்திலும், ராணிப்பேட்டை தொகுதிக்கு ராணிப்பேட்டை கோட்டாட்சியா் அலுவலகத்திலும், ஆற்காடு தொகுதிக்கு,ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் போது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 மற்றும் தோ்தல் நடத்தைவிதிகள், 1961 ஆகியவற்றின் விதிமுறைகள் கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.