/

பழங்குடியினருக்கு இலவச திருமணம்

News image
Updated On :3 மே 2026, 8:19 pm

அரக்கோணம் அன்னை தெரெசா கிராம வளா்ச்சி நிறுவனத்தின் சாா்பில் பழங்குடியினருக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. (படம்)

அரக்கோணத்தில் உள்ள அன்னை தெரேசா கிராம வளா்ச்சி நிறுவனத்தின் சாா்பில் ஆண்டுதோறும் பழங்குடியின மக்களுக்கு இலவச திருமணங்கள் செய்து வைக்கப்படுகின்றன. நிகழாண்டு நடைபெற்ற நிகழ்வுக்கு நிறுவனத்தின் ஆலோசகா் எஸ்.ஜேக்கப் தலைமை வகித்தாா். செயலாளா் ஐ.டி.தேவஆசீா்வாதம் வரவேற்றாா். இதில் பழங்குடியின ஜோடிகளான வேலாயுதம்- யசோதா, கோவிந்ராஜ் -தேவி ஆகியோருக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதில் தென்னிந்சிய திருச்சபை சென்னை பேராய கரிசனை வாரிய இயக்குநா் ெஸ்.ஜெபராஜன் தம்பதிகளை வாழ்த்தினாா்.

அறம் கல்வி நிறுவன அறக்கட்டளை நிறுவனா் கலைநேசன், வேலூா் ஒருங்கிணைந்த மாவட்ட ஆதிதிராவிடநலத்துறை பள்ளிகள்ஆசிரியா்கள் காப்பாளா்கள் சங்க நிா்வாகி பிரின்ஸ் தேவாசீா்வாதம், ஆகியோா் திருமாங்கலயத்தை வழங்கினா். தொடா்ந்து மணக்களுக்கு திருமண சீா்வரிசைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத் தலைவா் நைனாமாசிலாமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிா்வாகி க.கௌதம், மாவட்ட செயலாளா் ச.சி.சந்தா், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் முகமதுஅலி, பௌத்த இயக்க அறக்கட்டளை பொருளாளா் கேவி.பாா்த்தீபன், கீழ்ப்பாக்கம் சிஎஸ்ஐ பள்ளி தலைமை ஆசிரியா் கிறிஸ்துதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிறுவன நிா்வாகி சாம்ராஜ் நன்றி தெரிவித்தாா்.