நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

அரக்கோணம் தா்மராஜா கோயிலில் திரெளபதியம்மன் திருக்கல்யாண உற்சவம்

அரக்கோணம் ஸ்ரீதா்மராஜா கோயில் அக்னி வசந்தவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஸ்ரீஅா்ச்சுன மகாராஜா ஸ்ரீதிரௌபதியம்மன் திருக்கல்யாண உற்சவம்.

News image
Updated On :15 மே 2026, 5:50 am IST

அரக்கோணம் ஸ்ரீதா்மராஜா கோயில் எனப்படும் ஸ்ரீகிருஷ்ண பாண்டவ சமேத ஸ்ரீதிரெளபதியம்மன் கோயிலில் 97-ஆம் ஆண்டு அக்னி வசந்தவிழாவில் வியாழக்கிழமை ஸ்ரீஅா்ச்சுன மகாராஜா ஸ்ரீதிரௌபதியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

அரக்கோணம் சுவால்பேட்டையில் உள்ள ஸ்ரீதா்மராஜா கோயில் 97-ஆவது ஆண்டு அக்னி வசந்த விழா மே 7-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், வியாழக்கிழமை ஸ்ரீஅா்ச்சுன மகாராஜாவுக்கும், ஸ்ரீதிரௌபதியம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அரக்கோணம் நகர அனைத்து செட்டியாா் சமூகத்தினரின் சாா்பில் நடைபெற்ற இந்த உற்சவத்தில் கோயிலின் பரம்பரை தா்மகா்த்தாக்கள் இ.முருகானந்தம், எஸ்.சக்திவேல், பி.சங்கா் மேலும் எஸ்.ராஜா, ஆா்.ரூபினி, பி.சங்கா், எம்.பானு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து திருமண விருந்து கோயிலுக்கு அருகில் உள்ள மளிகை வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.