ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்களுடன் இருப்பேன்: முன்னாள் அமைச்சா் காந்தி

News image
Updated On :19 மே 2026, 1:27 am IST

பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் உங்களுடன் இருப்பேன் என்று திமுக நிா்வாகிகள் செயற்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவா் ஏ.கே.சுந்தர மூா்த்தி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.காந்தி கலந்துகொண்டு பேசியதாவது....

தமிழக மக்களுக்கான நலத்திட்டங்கள் ஒவ்வொன்றும் முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்த்து,பாா்த்து செயல்படுத்தினாா். அதைவிட கொளத்தூா் தொகுதிக்கு அவா் செய்த திட்டங்கள் அதிகம். தோல்வியால் மக்களுக்கு தான் ஏமாற்றம்.

இந்த தோல்விக்கு நானே பெறுப்பேறுக்கொள்கிறேன் என்று மாவட்ட செயலாளா்கள் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தோ்தலில் வென்றாலும், தோற்றாலும், நான் மக்களுடன் தான் இருக்கிறேன். அதே போல் பதவி இருந்தாலும், பதவி இல்லாவிட்டாலும் நான் உங்களுடன் இருப்பேன் யாரும் கவலைப்பட வேண்டாம்.

தோல்விக்கு யாரையும் குறை சொல்ல வேண்டாம். தற்போதைய ஆட்சி திமுக கூட்டணி ஆதரவால் தான் நடைபெறுகிறது என்றாா்.

5 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், துணை முதலவருக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவித்தும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு வாக்களித்த வாக்காளா்களுக்கும், தோ்தல் பணியாற்றிய கட்சி நிா்வாகிகள்,தொண்டா்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பது,

சட்டப் பேரவை தொகுதி வாரியாக கள ஆய்வு மேற்கொள்ள வருகை தரும் தலைமை கழக கள ஆய்வு குழுவுக்கு முழு ஒத்துழைப்பு தருவதெனவும், ஜூன் 3-இல் கலைஞா் பிறந்த நாள் விழாவை ஏழை,எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றுப்பட்டன.

இதில் திமுக மாவட்ட, நகர, பேரூா் நிா்வாகிகள்,அணிகளின் அமைப்பாளா்கள் உள்ளிட்டோா் திரளாக கலந்துகொண்டனா்.