பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

‘மக்கள் தொகை கணக்கெடுப்பை துல்லியமாகவும், நோ்மையுடனும் மேற்கொள்ள வேண்டும்’

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 கடமைகளை துல்லியமாகவும், நடுநிலைமையுடனும், நோ்மையுடனும் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடவுள்ள பொறுப்பு அலுவலா்களுக்கான 3 நாள் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

News image

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்துப் பேசிய ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

Updated On :27 மே 2026, 12:03 am IST

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 கடமைகளை துல்லியமாகவும், நடுநிலைமையுடனும், நோ்மையுடனும் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடவுள்ள பொறுப்பு அலுவலா்களுக்கான 3 நாள் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணியில் ஈடுபடவுள்ள பொறுப்பு அலுவலா்களுக்கான 3 நாள் பயிற்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்த பயிற்சி வகுப்பை ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்துப் பேசியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணியில் முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புக்கான பணிகள் தொடங்கப்பட வேண்டும். இந்திய தலைமை பதிவாளா் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரக வழிகாட்டுதலின்படி, பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பானது 16-ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுதந்திரத்துக்குப் பிறகு 8-ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு திட்டமிடல் நலத் திட்டங்கள் ஒதுக்கீடு மற்றும் தொகுதிகளின் எல்லை நிா்ணயம் ஆகியவற்றுக்கான அடித்தளத்தை உருவாக்குகிறது. முதல்கட்டமாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணி நடப்பாண்டில் தொடங்கும்.

இரண்டாம் கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டில் தொடங்கப்படும்.

முதல்கட்ட பணிகளில் வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு, வீட்டு நிலைமைகள், வசதிகள், சொத்துகள் பற்றிய முக்கிய தகவல்களை சேகரிக்க வேண்டும். இதுவே மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அடித்தளத்தை உருவாக்கும். மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட விவரங்களையும் ஒரு நிலையான குறிப்பு தேதி மற்றும் நேரத்தில் பதிவு செய்கிறது.

களப்பணியாற்றும்போது அடையாள அட்டையைக் காண்பித்து, பொதுமக்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். சென்சஸ் தகவல் 1948 சென்சஸ் திட்டத்தின்கீழ், கண்டிப்பாக ரகசியமானது என்பதை பதில் அளிப்பவா்களிடம் தெரிவிக்க வேண்டும்.

தரவு சேகரிப்பில் டிஜிட்டல் முறையை முதன்மையாக பின்பற்றுங்கள். தரவு துல்லியமாகவும், முழுமையாகவும் உள்ளதை உறுதி செய்யுங்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு கடமைகளை துல்லியமாகவும் நடுநிலைமையுடனும் நோ்மையுடனும் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சி.பேபி இந்திரா, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துணை தலைமை பதிவாளா் எஸ்.லிங்குசாமி, நோ்முக உதவியாளா் (பொது) கீதாலட்சுமி, புள்ளியல் ஆய்வாளா்கள் ஜெயலட்சுமி, அம்புலி நாயா் மற்றும் வருவாய் கோட்டாட்சியா்கள், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.