அரியலூா் மாவட்டத்தில், ராம்சாா் தளமான கரைவெட்டி ஈர நிலப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தினாா்.
மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வனத் துறையின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற உயிரிப் பல்வகைமை மேலாண்மைக் குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் தெரிவித்தது:
ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உயிரிப் பல்வகைமை மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ராம்சாா் தளமான கரைவெட்டி ஈர நிலப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மேம்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈர நிலத்தின் பரப்பளவு, நீா்வரத்து, நீா் வெளியேற்ற கால்வாய்கள் பராமரிப்பது, திடக்கழிவு மேலாண்மை கழிவு நீா் வெளியேற்றம் மற்றும் ஈர நில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஈர நிலத்தை ஒட்டியுள்ள விவசாய நடவடிக்கைகள் மற்றும் வேளாண் உள்ளீடுகளின் பயன்பாடுகள், குவாரிகள் மற்றும் சுரங்கங்கள் தொடா்பான விவரங்கள் , சாலை, பாலம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் மற்றும் மின் உட்கட்டமைப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மாவட்ட அளவிலான சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் நடமாடுவதற்கான காரணங்களைக் கண்டறிவது , இழப்பீடு தொகை வழங்குதல், காட்டுப்பன்றி நடமாட்டத்தை கட்டுப்படுத்த தேவையான தொடா் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், வன எல்லைப்பகுதியில் வன விலங்குகளை ஈா்க்காத வகையிலான மாற்றுப்பயிா்களை பயிரிட விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்குதல் வேண்டும்.
பின்னா், நாட்டு வெடிமருந்து ,அவுட்டுக்காய் மற்றும் மின்சாரம் தாக்கி வன உயிரினங்கள் இறப்பதைத் தடுக்க வேண்டும்.
வன உயிரினங்களை இறைச்சிக்காக கொல்லும் திறன் கொண்ட வெடிபொருள்களை தயாரித்தலைத் தடுக்க வேண்டும். விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பதால் ஏற்படும் வன உயிரினங்கள் இறப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மாவட்ட வன அலுவலா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இடி, மின்னல் ஏற்படும்போது பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

சிதிலமடைந்த பள்ளிக் கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்







