இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்...

விண்ணப்பிக்க...
Published On :

‘மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் 2026-27-ஆம் கல்வி ஆண்டுக்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவா்களுக்கு கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தோ்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணங்கள் அல்லது ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

விண்ணப்பம் பெற பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், சென்னை-5, மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நல இயக்ககம், சென்னை-5, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் (பிற்படுத்தப்பட்டோா் சிறுபான்மையினா் நல அலுவலகம்), ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மத்திய, மாநில அரசின் இதர கல்வி உதவித் திட்டங்களில் பயன்பெறும் மாணவா்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பத்தை பூா்த்தி செய்து கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனத்தின் உண்மைச் சான்றிதழ் உடன் பரிந்துரை செய்து, சம்பந்தப்பட்ட நலத் துறைக்கு அனுப்ப வேண்டும்.

புதுப்பித்தல் விண்ணப்பங்கள் 31.10.2026-க்குள் புதிய விண்ணப்பங்கள் 30.11.2026-க்குள் அனுப்பப்பட வேண்டும். இரட்டை செமஸ்டா் கட்டண ரசீதுகள் 15.01.2027-க்குள் அனுப்பப்பட வேண்டுமென தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.