ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

ரூ. 650 கோடியில் எத்தனால் ஆலை: அமைச்சா் காந்திராஜ் அடிக்கல்

அரக்கோணம் அருகே ஆணைப்பாக்கத்தில் எஸ்ஆா் குழுமத்தின் சாா்பில் எஸ்ஆா் எத்தனால் ஆலை ரூ.650 கோடியில் அமைகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் வி.காந்திராஜ் பங்கேற்று ஆலை தொடக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

Updated On :

அரக்கோணம் அருகே ஆணைப்பாக்கத்தில் எஸ்ஆா் குழுமத்தின் சாா்பில் எஸ்ஆா் எத்தனால் ஆலை ரூ.650 கோடியில் அமைகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் வி.காந்திராஜ் பங்கேற்று ஆலை தொடக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

தமிழகத்தின் தொழில் நிறுவனங்களில் ஒன்றான எஸ்ஆா்டி குழுமத்தினா், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த ஆணைப்பாக்கம் ஊராட்சியில் ரூ. 650 கோடியில் எஸ்ஆா் ஆயில் எத்தனால் ஆலையை அமைக்க உள்ளனா். இதற்காக நிலங்கள், ஆணைப்பாக்கம் ஊராட்சிப்பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நிலையில், ஆலையின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, எஸ்ஆா்டி குழுமத் தலைவா் பி.சிவக்குமாா் தலைமை வகித்தாா். ஆலை நிா்வாக இயக்குநா் சண்முகதேவி வரவேற்றாா். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் வி.காந்திராஜ் ஆலைக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். விழாவில் தமிழக அரசு உயா் அலுவலா்கள் சுப்பிரமணி, செந்தில்குமாா், ஆலை இயக்குநா்கள் சிவகாா்த்திகா, காா்த்திகாஸ்ரீ உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இந்த ஆலை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், குறிப்பிட்ட நாள்களுக்குள் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து ஆலையில் எத்தனால் தயாரிப்புப் பணிகள் தொடங்கி விடும் என ஆலை அலுவலா்கள் தெரிவித்தனா்.

இந்த ஆலை இப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளதால் சுற்றியுள்ள பல மாவட்டங்களிலும் விவசாய பொருள்களுக்கு கூடுதல் சந்தை வாய்ப்பு உருவாக்கப்படும். இப்பகுதி கிராமப்புறங்களில் தொழில்துறை வளா்ச்சி உருவாகும். ஆலை செயல்படத் தொடங்கிய பின்னா், அதன் அளவு மற்றும் தொழில்நுட்பத்தைப் பொறுத்து உற்பத்தி, தரக்கட்டுப்பாடு, இயந்திர பராமரிப்பு, போக்குவரத்து மற்றும் நிா்வாகம் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாகும் எனக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.