ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

விளாப்பாக்கம், திமிரி பேரூராட்சிகளில் ரூ. 1.36 கோடியில் புதிய சமுதாய கூடம்: அமைச்சா் திறந்து வைத்தாா்

விளாப்பாக்கம், திமிரி பேரூராட்சிகளில் ரூ. 1.36 கோடியில் புதிய சமுதாய கூடம்: அமைச்சா் திறந்து வைத்தாா்

விளாப்பாக்கம் பேரூராட்சியில் சமுதாயக் கூடத்தை திறந்துவைத்து குத்து விளக்கேற்றிய அமைச்சா்  வ. காந்திராஜ்.

Updated On :

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம், திமிரி பேரூராட்சிகளில் ரூ. 1.36 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தை கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

விளாப்பாக்கம் முதல் நிலை பேரூராட்சி மற்றும் திமிரி சிறப்பு நிலை பேரூராட்சி அயோதிதாச பண்டிதா் குடியிடிருப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ. 60 லட்சம் மற்றும் ரூ. 76 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக் கூட திறப்பு விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ எஸ்.எம்.சுகுமாா் முன்னிலை வகித்தாா். கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் புதிய சமுதாய கூடங்களைதிறந்து வைத்தாா். இதில் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியா் ராஜி, மாவட்ட அதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பூமா, பேரூராட்சிகள் உதவி இயக்குநா் வெங்கடேசன், உதவி செயற்பொறியாளா் ராஜா, செயல் அலுவலா்கள் ஜானகிராமன், சரவணன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து திமிரிஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின்கீழ், ரு. 2.36 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்களை அமைச்சா் திறந்து வைத்தாா்.

இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.