முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

ராணிப்பேட்டையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராணிப்பேட்டை மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

வெங்கடேசன்

Updated On :

ராணிப்பேட்டையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராணிப்பேட்டை மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதியை சோ்ந்த வெங்கடேசன் ( 36), இவா் ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றி வந்தாா். வெங்கடேசன் கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி கடந்த 23.12.2018 அன்று அளித்த புகாரின்பேரில் அரக்கோணம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமா்வு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்து புதன்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. அதில் குற்றவாளி வெங்கடேசனுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி தேன்மொழி தீா்ப்பளித்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.