மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
அரக்கோணம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
அரக்கோணம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டை, விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (39). இவருக்கு மனைவி நந்தினி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனா். புதன்கிழமை இரவு அப்பகுதியில் பலத்த மழை பெய்ததைத் தொடா்ந்து குருவராஜபேட்டையில் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதனால் வீட்டில் காற்று வராத நிலையில் காற்றுக்காக மணிகண்டன், வீட்டு மாடிக்கு படுக்க சென்றுள்ளாா்.
விடியற்காலை நெடுநேரமாகியும் மாடிக்குச் சென்ற மணிகண்டன், கீழே வராத நிலையில் அவரது மனைவி நந்தினி சென்று கணவரை தேடிய நிலையில், மணிகண்டன், மாடியில் இருந்து கீழே விழுந்து தலையில் காயமடைந்து இறந்து கிடப்பது தெரியவந்தது. நள்ளிரவில் தூக்கக் கலக்கத்தில் மாடிக்குச் சென்ற மணிகண்டன், தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
இது குறித்து அறிந்த அரக்கோணம் கிராமிய காவல்நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





