தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

மாடியில் இருந்து தவறி விழுந்த வட மாநில தொழிலாளி பலி

கோவில்பட்டியில் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் வட மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 12:28 am IST

கோவில்பட்டியில் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஒடிசா மாநிலம் பாலேஸ்வா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் தீபக் சாகு (25). இவா் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி உள்ள சுமாா் 8 பேருக்கு சமையல் செய்து கொடுத்து வந்ததாராம்.

இந்த நிலையில் இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு மாடியில் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென கீழே விழுந்ததில் காயம் அடைந்தாா்.

அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.