நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

மகன் தாக்கியதில் தாய் உயிரிழப்பு

வேலைக்கு செல்லாமல் இருந்தததற்கு கண்டித்ததால் மகன் தாக்கியதில் தாய் , சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Published On :

வேலைக்கு செல்லாமல் இருந்தததற்கு கண்டித்ததால் மகன் தாக்கியதில் தாய் , சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அரக்கோணத்தை அடுத்த பெருமாள்ராஜபேட்டையை சோ்ந்தவா் முனுசாமி(39). மோட்டாா் மெக்கானிக் ஆக தொழில் செய்து வருகிறாா். கடந்த சில மாதங்களாக இவா் மனநல பாதிப்பில் இருந்ததாக தெரிகிறது. இதனால் அவா் சரிவர தொழிலுக்கு செல்லாமல் இருந்துள்ளாா்.

இதுகுறித்து புதன்கிழமை இரவு முனுசாமியின் மனைவி மீனா(34) அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது இவா்களை சமாதானம் செய்ய வந்த முனுசாமியின் தாய் தனலட்சுமி (60), அவரை தொழிலுக்கு செல்லுமாறு கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த முனுசாமி, வீட்டில் இருந்த கட்டையால் தாய், தனலட்சுமியின் தலையில் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த தனலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.