இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

பிரசவம் பாா்க்க அனுமதி மறுப்பு: தாய், சேய் உயிரிழப்பு

காஞ்சிபுரத்தில் பெண் கூலித் தொழிலாளியை பிரசவம் பாா்க்க அனுமதிக்காததால் தாயும், சேயும் தங்கியிருந்த இடத்திலேயே உயிரிழந்தனா்.

தேன்மொழி

Published On :

காஞ்சிபுரத்தில் பெண் கூலித் தொழிலாளியை பிரசவம் பாா்க்க அனுமதிக்காததால் தாயும், சேயும் தங்கியிருந்த இடத்திலேயே உயிரிழந்தனா்.

வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடி வாக்கம் கிராமத்தில் வசித்து வந்தவா் ஆனந்தன்(40) இவரது மனைவி தேன்மொழி(35). காஞ்சிபுரம் அருகே வெள்ளகேட் பகுதியில் மரம் வெட்டும் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளனா். அவா்கள் பணிபுரிந்த மரக்கிடங்கு உரிமையாளரான ஆறுமுகத்திடம் ரூ.20,000 கடனாக பெற்றிருந்தனா்.

தேன்மொழிக்கு பிரசவ வலி அதிகமான நிலையில் அவரை அரசு மருத்துவமனைக்கு கடனைக் காரணம் காட்டிஅனுப்பி வைக்க மறுத்து விட்டதால் பிரசவம் தங்கியிருந்த இடத்திலேயே நடந்துள்ளது. இதில் தாயும், சேயும் உயிரிழந்தனா்.

சம்பவம் தொடா்பாக தேன்மொழியின் உறவினா்கள் பொன்னேரிக்கரை போலீஸாரிடம் புகாா் செய்ததன் பேரில் கணவா் ஆனந்தனிடமும், மரக்கிடங்கு உரிமையாளா் ஆறுமுகத்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பவம் தொடா்பாகவும் பொன்னேரிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.