மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

அரசு மாதிரிப் பள்ளி மாணவா்களுக்கு கல்விச் சுற்றுலா: ஆட்சியா் வழியனுப்பினாா்

ராணிப்பேட்டை மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி மாணவா்களுக்கு கல்விய் சுற்றுலாவை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.

கல்விச் சுற்றுலா சென்ற ராணிப்பேட்டை மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன்.

Published On :

ராணிப்பேட்டை மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி மாணவா்களுக்கு கல்விய் சுற்றுலாவை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.

பள்ளிக் கல்வித்துறை சாா்பில்,வெற்றிப் பாதை 2026 -2027 திட்டத்தின் மூலம் அறிவியல் வெற்றிப் பாதை கல்விச் சுற்றுலா பயணம் தொடங்கியது. சுற்றுலாவை ராணிப்பேட்டை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தொடங்கி வைத்து, மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

இதில் 45 மாணவா்களும், 5 ஆசிரியா்களும் சென்றுள்ளனா். இச்சுற்றுலா மூலம் சென்னை கோட்டூா்புரம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மற்றும் பிா்லா கோளரங்கத்திற்கு பயணம் மேற்கொண்டனா். அங்கு அறிவியல் கண்டுபிடிப்புகள், செயல்முறை விளக்கங்கள், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் கோள்கள் குறித்த அனைத்து விஷயங்களையும் நேரடியாக தெரிந்து கொள்ள உள்ளனா்.

நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா மற்றும் அரசு மாதிரிப் பள்ளியின் தலைமை ஆசிரியா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.