ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பெல் தொழிலக அணி ஹாக்கிப் போட்டி: போபால் சாம்பியன்

பெல் தொழிலக அணிகளுக்கான ஹாக்கி போட்டியில் போபால் அணி கோப்பையை வென்றது.

கோப்பையை வென்ற போபால் அணியுடன் பெல் நிறுவன செயல் இயக்குநா் எம்.அருண் மொழிதேவன் உள்ளிட்டோா்.

Published On :

பெல் தொழிலக அணிகளுக்கான ஹாக்கி போட்டியில் போபால் அணி கோப்பையை வென்றது.

நாடு முழுவதிலும் செயல்பட்டு வரும் பாரத மிகுமின் (பெல்) நிறுவனப் பணியாளாா்களுக்கு இடையே ஆண்டுதோறும் கபடி, ஹாக்கி, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2026-ஆம் ஆண்டுக்கான ஹாக்கிப் போட்டி, ராணிப்பேட்டை பெல் நிறுவன ஊரக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை, திருச்சி, ஆா்.சி. புரம் ஹைதராபாத், ஹரித்துவாா் ஆகிய 5 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. ரவுண்ட்-ராபின் முறையில் நடைபெற்ற இதில் போபால் அணி முதலிடமும், திருச்சி அணி இரண்டாம் இடமும் பிடித்தன.

நிறைவு விழாவில் ராணிப்பேட்டை பெல் நிறுவன செயல் இயக்குநா் எம். அருண்மொழி தேவன் மற்றும் பொது மேலாளா்கள் ஆகியோா் பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் பெல் நிறுவனத்தில் பொது மேலாளா்கள், மூத்த அதிகாரிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER