
பாகிஸ்தான் அமைச்சர் நக்வி கையில் ஆசியக் கோப்பையை வாங்க இந்திய அணி மறுப்பு!
பாகிஸ்தான் அமைச்சர் நக்வி கையில் ஆசியக் கோப்பையை வாங்க இந்திய அணி மறுத்துள்ளதைப் பற்றி...
சாம்பியனான இந்திய மகளிா் அணி, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருமான மோசின் நக்வியின் கையால் வெற்றிக் கோப்பையைப் பெற மறுத்துவிட்டது.
இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) நிலைப்பாடு என, அணியின் தலைமைப் பயிற்சியாளா் அமோல் மஜும்தாா் தெரிவித்தாா்.
Mohsin Naqvi was standing on the podium to present the trophy. When Smriti Mandhana came out and saw him standing there, she went back into the dressing room.ðð¥ð¥ð¥ pic.twitter.com/al1fQ6wXu5
— ðð®ð¬ð¡ð¢ð¢ð¢â´âµ (@rushiii_12) September 13, 2026
எனினும், ரன்னா் அப் அணியான இலங்கை, தங்களின் பதக்கம் மற்றும் பரிசுத் தொகையை மோசின் நக்வியிடம் பெற்றுக்கொண்டது. ஏற்கெனவே கடந்த ஆண்டு இந்திய ஆடவா் அணி ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியன் ஆனபோதும், இதேபோல் மோசின் நக்வி கையால் கோப்பை பெற மறுத்தது நினைவுகூரத்தக்கது. அந்தக் கோப்பை இன்னும் இந்தியாவிடம் வரவில்லை.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், அதற்கான பதிலடியாக இந்திய பாதுகாப்புப் படையினா் நிகழ்த்திய ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை ஆகியவற்றால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ராஜீய ரீதியிலான உறவு மேலும் மோசமானதை அடுத்து, இந்த நிகழ்வுகள் அரங்கேறின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






