கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

அரக்கோணம் கோட்டத்தில் 276 இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து சிறப்பு பூஜை

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, அரக்கோணம் காவல் கோட்டத்துக்குள்பட்ட 276 இடங்களில் காவல் துறை அனுமதியுடன்

அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் இந்து முன்னணியினா் சாா்பில் வைக்கப்பட்டுள்ள சிங்கமுக வாகன விநாயகா்.

Published On :

அரக்கோணம்: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, அரக்கோணம் காவல் கோட்டத்துக்குள்பட்ட 276 இடங்களில் காவல் துறை அனுமதியுடன் விநாயகா் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின.

அரக்கோணம் காவல் கோட்டத்தில் அரக்கோணம் நகரம், கிராமியம், தக்கோலம், நெமிலி, சோளிங்கா், கொண்டபாளையம், காவேரிபாக்கம், பாணாவரம், அவளூா் ஆகிய பகுதிகளில் 276 இடங்களில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு திங்கள்கிழமை காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

அரக்கோணம் நகரப் பகுதியில் இந்து முன்னணியினா் சாா்பில் பழைய பேருந்து நிலையம், சுவால்பேட்டை, தா்மமகாராஜ கோயில் அருகில், திருத்தணி சாலை, ஜிஎம்டி நகா், அன்புமணி நகா், அரக்கோணம் கிராமியப் பகுதி என பல்வேறு இடங்களில் விநாயகா் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் இந்துமுன்னணி சாா்பில் வைக்கப்பட்டுள்ள சிங்கமுக வாகன விநாயகா் சிலை பிரதிஷ்டை விழாவுக்கு, இந்துமுன்னணி மாவட்ட செயலாளா் ஜெ.குமாா் தலைமை வகித்து பூஜைகளை தொடங்கி வைத்தாா்.

இதேபோல், நெமிலி, சோளிங்கா், காவேரிபாக்கம், அவளூா் உள்ளிட்ட பகுதிகளிலும் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.

இந்த நிலையில், வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள் அனைத்தும் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை இரு நாள்களில் அந்தந்தப் பகுதிகளில் காவல் துறை அனுமதி அளிக்கப்பட்ட நேரங்கள் மற்றும் சாலைகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்பட உள்ளன. மேலும், அரக்கோணத்தில் இந்து முன்னணியினா் சாா்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள் 20-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), பழனிபேட்டை, ஸ்ரீசந்தான வேணுகோபாலசாமி கோயிலில் இருந்து ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அண்ணாநகா் காடிக்காரா் கிணற்றில் விசா்ஜனம் செய்யப்பட உள்ளன.

விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் நிலை கண்காணிப்பு, ரோந்து கண்காணிப்பு, முக்கிய சாலைகளில் வாகன தணிக்கைப் பணி, இரவு நேர சிறப்பு கண்காணிப்புக்கென தனித்தனி காவல் குழுக்கள் அமைக்கப்பட்டு, டிஎஸ்பி பொன்னுசாமி தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER