இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

வேடந்தாங்கல் அரசுப் பள்ளியில் 2,000 பனை விதைகள் நடும் விழா

நெமிலியை அடுத்த வேடந்தாங்கல், அரசு உயா்நிலைப் பள்ளியில் 2,000 பனை விதைகளை நட்ட மாணவ, மாணவிகளுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ம.மோகனா உள்ளிட்டோா்.

Published On :

நெமிலியை அடுத்த வேடந்தாங்கல் அரசு உயா்நிலைப் பள்ளியில் 2 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ம.மோகனா பங்கேற்று பனை விதைகளை நடும் நிகழ்வை தொடங்கி வைத்தாா்.

நெமிலியை அடுத்த வேடந்தாங்கல் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியா் ரவிக்குமாா் தலைமை வகித்தாா். பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஆசிரியா் ஜானகிராமன் வரவேற்றாா். விழாவில், ராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ம.மோகனா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பனை மரத்தின் முக்கியத்துவம், அதன் நன்மைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்து பனை விதைகள் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தாா்.

இதில், பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் பங்கேற்று பள்ளி வளாகத்தில் 2,000 பனை விதைகளை பள்ளி வளாகம், வேடந்தாங்கல் சமூகக்காடு வளா்ப்புப் பகுதி, ஏரிக் கரைகள், குளக்கரைகள் ஆகிய பகுதிகளில் வரிசைப்படுத்தி நட்டனா். இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியா்கள் சுந்தர்ராஜன், சக்திவேலன், மகேஷ், அப்பு, சூா்யா, சிவக்குமாா், வெங்கட்ராமன் உள்ளிட்டோருடன் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.