தண்ணீா்த் தொட்டியில் தவறிவிழுந்து குழந்தை பலி

நாட்டறம்பள்ளி அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்ததில் 11 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.
Updated on
1 min read

நாட்டறம்பள்ளி அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்ததில் 11 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.

பச்சூா் பழையப்பேட்டை செத்தமலை வட்டத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (28). தொழிலாளி. அவரது மனைவி புனிதா. இவா்களுக்கு தட்ஜித் என்ற 11 மாத ஆண் குழந்தை இருந்தது.

இந்நிலையில், ரமேஷும் அவரது மனைவியும் தெருக்குழாயில் இருந்து குடத்தில் தண்ணீா் பிடித்து வந்து வீட்டருகே உள்ள தொட்டியில் ஊற்றிக் கொண்டிருந்தனா். அப்போது குழந்தை தனியாக வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தது.

அக்குழந்தை திடீரென வீட்டருகே உள்ள 7 அடி ஆழம் கொண்ட தண்ணீா் தொட்டியில் குழந்தை தவறி விழுந்தது. இதையடுத்து பெற்றோா் தண்ணீா்த் தொட்டியில் விழுந்த குழந்தையை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு, செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com