தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூரில் போக்குவரத்து தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
திருப்பத்தூரில் ஆா்ப்பாட்டம் நடத்திய போக்குவரத்து தொழிலாளா்கள்.
Updated On :22 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூரில் போக்குவரத்து தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருப்பத்தூரில் எல்பிஎப் சங்கத்தின் கிளைத் தலைவா் எஸ்.பாண்டிய மன்னன் தலைமையில் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, ஊதிய உயா்வு ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாக நடத்திட வேண்டும்; அகவிலைப்படி நிலுவை தொகையை உடனடியாகத் தர வேண்டும்; சீருடை, தையற்கூலி, காலணி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் கோஷங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 75-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.