வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்

ஆலங்காயம் அருகே வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
Updated on
1 min read

வாணியம்பாடி: ஆலங்காயம் அருகே வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள பூங்குளம் பகுதியில் ஒருவா் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், வாணியம்பாடி டிஎஸ்பி பழனிசெல்வம் உத்தரவின்பேரில், ஆலங்காயம் காவல் ஆய்வாளா் நாகராஜன் தலைமையில் போலீஸாா் பூங்குளம் பகுதியில் புதன்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது, சந்தேகப்படி சுற்றித் திரிந்த ஒரு நபரை போலீஸாா் பிடிக்க முயன்றபோது, அந்த நபா் அருகே இருந்த வீட்டுக்குள் சென்று பதுங்கினாா்.

அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் அப்பகுதியைச் சோ்ந்த தமிழரசன் (24) என்பதும், உரிய ஆவணங்கள் ஏதுமின்றி வீட்டில் நாட்டுத் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது. அத்துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்து, தமிழரசன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com