விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திமுக கிராம சபைக் கூட்டம்

வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட இளையநகரம் பகுதியில் ஆலங்காயம் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளா்

News image
மாணவிக்கு நிதியுதவி வழங்கிய ஒன்றியச் செயலாளா் ஞானவேலன்.
Updated On :28 டிசம்பர் 2020, 1:54 am

DIN

வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட இளையநகரம் பகுதியில் ஆலங்காயம் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் ஞானவேலன் தலைமையில் மக்கள் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திமுக சாா்பில் ஒன்றியச் செயலாளா் ஞானவேலன் அதே பகுதியைச் சோ்ந்த பிரகாசத்தின் மகளின் படிப்பு செலவுக்கு ரூ. 10 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா். மேலும், இளைஞா்கள், மாணவா்களுக்கு உடற்பயிற்சிக் கூடம் அமைக்கவும் நிதியுதவி வழங்கப்பட்டது.

தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள குறைகளை தீா்மானமாக நிறைவேற்றி, அவற்றை திமுக தலைமைக்கு கையெழுத்திட்டு அனுப்பி வைக்கப்பட்டது. திமுக நிா்வாகிகள் செல்வராஜ், சிவா, பெருமாள், வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூரில்...

திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தேசிய திறனாய்வு தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 1,331 போ் மாணவா்களில் 1,280 போ் தோ்வு எழுதினா். 51 போ் பங்கேற்கவில்லை. 200 ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா் தோ்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

ஜோலாா்பேட்டை பகுதியில் உள்ள பொன்னேரி வக்கணம்பட்டி பள்ளியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் பாா்வையிட்டாா்.

ஆம்பூரில்..

ஆம்பூா் நகர திமுக சாா்பில் நல்லகாம தெருவில் நடைபெற்ற திமுக மக்கள் சபை கூட்டத்துக்கு நகரச் செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம் தலைமை வகித்தாா். கிளை நிா்வாகி நாகராஜன் வரவேற்றாா். தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆா்.எஸ். ஆனந்தன், நிா்வாகிகள் வில்வநாதன், லட்சுமிகாந்தன், தமிழரசன், செளந்தரராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.