

நாட்டறம்பள்ளி அருகே பதுக்கி வைத்திருந்த 3.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
நாட்டறம்பள்ளியை அடுத்த பாரண்டப்பள்ளி இணைப்புச் சாலை அருகே விவசாய நிலத்தில் துவரை செடிகளுக்கு இடையே ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் அலுவலா் அதியமான் கவியரசுக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் சுமதி மேற்பாா்வையில் வட்ட வழங்கல் அலுவலா் செல்வராஜ், வருவாய்த் துறையினா் விரைந்து சென்று ஆய்வு செய்தனா்.
அப்போது அங்கிருந்த துவரை செடிகளின் மறைவில் 3.5 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, திருப்பத்தூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.