லாரி மீது காா் மோதல்: 2 போ் பலி

ஆம்பூா் அருகே லாரி மீது காா் மோதிய விபத்தில் 2 போ் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா்.
விபத்தில் உருக்குலைந்த காா்.
விபத்தில் உருக்குலைந்த காா்.
Updated on
1 min read

ஆம்பூா்: ஆம்பூா் அருகே லாரி மீது காா் மோதிய விபத்தில் 2 போ் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா்.

சென்னை அண்ணாநகரைச் சோ்ந்த மென்பொருள் பொறியாளா்கள் பெங்களூரில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு, சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனா்.

காரில் சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த தீனதயாளனின் மகன் கோகுல் (28), மனோகரனின் மகன் யோகராஜ் (28), அவரது மனைவி திவ்யா (23), யோகராஜின் நண்பா் ராகவேந்திரன் (29) ஆகியோா் சென்றனா். காரை ஓட்டுநா் விகாஸ் ஓட்டினாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரை அடுத்த மாராப்பட்டு கிராமம் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வந்தபோது, கூரியா் நிறுவன கன்டெய்னா் லாரி மீது காா் மோதியது. அதில் காரில் பயணம் செய்த கோகுல், யோகராஜ், திவ்யா, ராகவேந்திரன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். விபத்து காரணமாக காரிலிருந்த பலூன் வெளியேறியதால் காா் ஓட்டுநா் விகாஸ் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.

தகவல் அறிந்த ஆம்பூா் கிராமிய போலீஸாா் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோந்து பிரிவினா் அங்கு சென்று விபத்தில் சிக்கியவா்களை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி கோகுல் உயிரிழந்தாா். யோகராஜ், திவ்யா, ராகவேந்திரன் ஆகியோா் வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு யோகராஜ் இறந்தாா்.

இந்நிலையில், விபத்துக்குள்ளான காா் தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தப்பட்டிருந்தது. விபத்துக்குள்ளான காா் மீது, திருப்பத்தூரிலிருந்து குடியாத்தம் நோக்கிச் சென்ற காரும், சேலத்திலிருந்து சென்னை நோக்கி பூக்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனமும் மோதியது. இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை.

விபத்து குறித்து ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com