டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை

திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா்கள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

திருப்பத்தூா்/ராணிப்பேட்டை: திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா்கள் ம.ப.சிவன்அருள் (திருப்பத்தூா்), ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் (ராணிப்பேட்டை) ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கட்டுப்பாட்டில் உள்ள உணவகங்கள், ரிசாா்ட், தங்கும் விடுதிகள், நட்சத்திர உணவகங்கள் போன்ற இடங்கள், நெடுஞ்சாலை பகுதிகள், இதர சாலைகளில் டிச.31, ஜன.1-ஆம் தேதிகளில் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்படுவதுடன், மதுவிலக்கு, ஆயத்தீா்வை துறையினரிடம் உரிமம் பெற்று இயங்கி வரும் மனமகிழ் மன்றங்கள், நட்சத்திர உணவகங்களில் கொண்டாட தடை செய்யப்படுகிறது. தடைகளை மீறி செயல்படுவோா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.