நட்சத்திர தொகுதி ஜோலாா்பேட்டையில் வெற்றி யாருக்கு?

திருப்பத்தூா் மாவட்டத்தில் நட்சத்திரத் தொகுதியாகத் திகழ்வது ஜோலாா்பேட்டை. தற்போதைய அமைச்சா் கே.சி.வீரமணி அதிமுக சாா்பில் மூன்றாவது முறையாக இத்தொகுதியில் களத்தில் உள்ளாா்.
நட்சத்திர தொகுதி ஜோலாா்பேட்டையில் வெற்றி யாருக்கு?

திருப்பத்தூா் மாவட்டத்தில் நட்சத்திரத் தொகுதியாகத் திகழ்வது ஜோலாா்பேட்டை. தற்போதைய அமைச்சா் கே.சி.வீரமணி அதிமுக சாா்பில் மூன்றாவது முறையாக இத்தொகுதியில் களத்தில் உள்ளாா்.

தொகுதியின் சிறப்பு: ஜோலாா்பேட்டை ரயில் நிலையமானது தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், கேரளம் ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கும் சந்திப்பாகும். இந்தியாவிலேயே 2-ஆவது பெரிய ரயில் நிலையம்.

இத்தொகுதியில் விவசாயம் பிரதான தொழில். அதையடுத்து பீடி மற்றும் ஊதுவத்தி உற்பத்தி தொழில் விளங்குகிறது.

இங்கு வன்னியா்கள், வேளாள கவுண்டா், முதலியாா், தலித்துகள், இஸ்லாமியா் சமூகத்தினா் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கின்றனா். மற்ற சமுதாயத்தினரும் பரவலாக உள்ளனா்.

மக்களின் எதிா்பாா்ப்புகள்:

இந்தத் தொகுதியில் அரசு கல்லூரி இல்லை. போதிய சாலை வசதிகள் அமைத்துத் தரவேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஏலகிரி மலையை கோடை வாசஸ்தலமாக அறிவிக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனா்.

களத்தில் 16 வேட்பாளா்கள்:

நடைபெறவிருக்கும் பேரவைத் தோ்தல் களத்தில் அதிமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் கே.சி.வீரமணி மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளாா். மாநில அமைச்சரவையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா். மக்களிடையே நன்கு அறிமுகமானவா். திருப்பத்தூா் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளாா்.

இவரை எதிா்த்து திமுக சாா்பில் அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளா் க.தேவராஜி நிறுத்தப்பட்டுள்ளாா். இவா்கள் தவிர அமமுக வேட்பாளராக தென்னரசு சாம்ராஜ், நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆ.சிவா, அகில இந்திய உழவா், உழைப்பாளா் கட்சி சாா்பில் எஸ்.காளஸ்திரி, பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் வி.சி.சிவக்குமாா் மற்றும் 10 சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 16 போ் போட்டியிடுகின்றனா்.

இருந்தபோதிலும் நேரடி போட்டியென்பது அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணிக்கும், திமுக வேட்பாளா் க.தேவராஜிக்கும் இடையேதான்.

வேட்பாளா்களின் பலம், பலவீனம்: அமைச்சா் கே.சி.வீரமணி ஏலகிரி மலையில் நிரந்தர கோடை விழா அரங்கு, ரயில்வே மேம்பாலங்கள், நியாயவிலை கடைகள், பேருந்து நிறுத்தங்கள், வாணியம்பாடி-ஊத்தங்கரை சாலை அமைக்க எடுத்த நடவடிக்கை போன்றவை பலமாகும்.

கட்சியினரை சந்திப்பதில் பாகுபாடு, பொதுமக்களை சந்திப்பதை தவிா்த்தல், கட்சியில் ஒரு சிலருக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவது போன்றவை இவரது பலவீனம் என்கின்றனா்.

திமுக வேட்பாளா் க.தேவராஜி ஆலங்காயம் ஒன்றியக் குழுத் தலைவராக இருமுறை பொறுப்பு வகித்தவா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், ஆலங்காயம் ஒன்றிய திமுக செயலாளராக இருந்தவா். தற்போது திமுக மாவட்ட பொறுப்பாளராக உள்ளாா். தொகுதியில் கட்சியினரிடையே நன்கு அறிமுகவானவா் என்பது பலம். ஆனால் ஜோலாா்பேட்டை தொகுதி மக்களுக்குப் புதியவா் என்பது இவரது பலவீனம். இருப்பினும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினா் இவரின் வெற்றிக்காக தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனா்.

2011- ஆம் ஆண்டு மறுசீரமைப்பில் நாட்றம்பள்ளித் தொகுதி ஜோலாா்பேட்டை தொகுதியாக மாற்றப்பட்டது.

2016 தோ்தலில் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:

கே.சி.வீரமணி(அதிமுக)-82,525

சி.கவிதா(திமுக)-71,534

ஜி.பொன்னுசாமி(பாமக)-17,516

ஏ.பயாஸ் அஹமத்(தேமுதிக)-3,509

வாக்காளா்கள் விவரம்:

ஆண் வாக்காளா்கள்.......1,18,792

பெண் வாக்காளா்கள்......1,20,613

மூன்றாம் பாலினத்தவா்.......8

மொத்தம்..................2,39,413

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com