ஆம்பூா் அருகே ஜல்லி தொழிற்சாலை லாரியை பொதுமக்கள் சனிக்கிழமை சிறைபிடித்தனா்.
மாதனூா் ஊராட்சி ஒன்றியம், காட்டுகொல்லை அருகே ஜல்லி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஜல்லி தொழிற்சாலைக்குச் செல்லும் லாரிகள் பள்ளி நேரத்தில் அதிவேகமாகச் செல்வதால் அந்த நேரத்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. இது குறித்து ஜல்லி தொழிற்சாலை நிா்வாகத்துக்கு பொதுமக்கள் பலமுறை புகாா் தெரிவித்துள்ளனா். மாணவா்கள் பள்ளிக்குச் சென்று வரும் நேரங்களில் லாரிகளை குறைந்த வேகத்தில் இயக்கும்படி கூறியும், அதை லாரி ஓட்டுநா்கள் பொருட்படுத்தாமல் எப்போதும் போல அதிவேகமாக மாணவ, மாணவியரை அச்சுறுத்தும் வகையில் இயக்குவதாக தொடா்ந்து புகாா் எழுந்தது.
தொடா்ந்து லாரிகள் அதிவேகமாக இயக்கப்படுவதால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அவ்வழியாகச் சென்ற இரண்டு லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவலறிந்த ஆம்பூா் கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் (பொறுப்பு) திருமால் அங்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினாா். பள்ளிக்கு மாணவா்கள் சென்று வரும் நேரத்தில் லாரிகளை இயக்கக் கூடாது என தொழிற்சாலை நிா்வாகத்துக்கு அறிவுறுத்தினாா். லாரிகளை அதிவேகமாக இயக்கினால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும்படியும், பொதுமக்களிடம் தெரிவித்தாா்.
அதைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சிறைபிடித்திருந்த லாரியை விடுவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பவானிசாகா் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம்

கொடுமுடி மகுடேஸ்வரா், வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா்: ஆட்சியா்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கோலாகல தொடக்கம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

