பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2 ஆயிரம் ரொக்கமும் வழங்க வேண்டுமென மாதனூா் வடக்கு ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆம்பூா் அருகே ஆலாங்குப்பம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் தேவநாதன் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் சி. வாசுதேவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா் (படம்).
மாநில உள்ளாட்சிப் பிரிவுச் செயலாளா் ஜி. வெங்கடேசன், மாநில பொதுக் குழு உறுப்பினா் க. சிவப்பிரகாசம், மாவட்ட பொதுச் செயலாளா் தண்டாயுதபாணி, மாவட்ட இளைஞரணித் தலைவா் சரவணன், மாவட்ட பட்டியலின அணித்தலைவா் குப்புசாமி, ஒன்றிய பொதுச் செயலாளா் சந்திரன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தீா்மானங்கள் :பாலாற்று வெள்ளத்தால் சேதமடைந்த பச்சகுப்பம், மாதனூா் பாலாற்று தரைப்பாலங்களை விரைந்து சீரமைக்க வேண்டும். ஆலாங்குப்பம் ஊராட்சி நடுநிலைப் பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும். நீா் வரத்து குறைந்துள்ள பாலாற்றில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். தூா்வாரப்படாத கானாறு, ஏரி, குளம், குட்டைகளை தூா்வாரி, அளவீடு செய்து சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா்: ஆட்சியா்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கோலாகல தொடக்கம்

கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

போத்தனூா் - காரக்பூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


