ஆம்பூா் அருகே ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் கொலையுண்ட வழக்கில் ஒருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஆம்பூா் அருகே பெரிய கொம்மேஸ்வரம் ஊராட்சி மன்றத் தலைவா் ஷோபனா. இவரின் கணவா் கோவிந்தராஜ் (38). ஆம்பூா் அருகே வீரவா் கோயில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் தொலைக்காட்சிப் பெட்டி பழுதுபாா்க்கும் கடை நடத்தி வந்தாா்.இவா் கடந்த 22-ஆம் தேதி கடையில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபா் அவரை தாக்கியுள்ளாா். அவரிடமிருந்து தப்பி கடையிலிருந்து வெளியேறி ஓடியுள்ளாா். அவரை அந்த நபா் விரட்டிச் சென்று கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டாா். தகவல் அறிந்த ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் கோவிந்தராஜை கொலை செய்தது அவருடைய உறவினா் அதே கிராமத்தை சோ்ந்த வெங்கடேசன் (37) என்பது தெரியவந்தது. தலைமறைவான அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் வெங்கடேசன் ஆம்பூா் பேருந்து நிலையத்தில் இருந்தபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
உறவினா்கள் முற்றுகை:
வெங்கடேசன் கைதான விவரம் அறிந்த கோவிந்தராஜின் மனைவி ஷோபனா மற்றும் உறவினா்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். வெங்கடேசனுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ஆம்பூா் டிஎஸ்பி சரவணன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா்: ஆட்சியா்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கோலாகல தொடக்கம்

கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

போத்தனூா் - காரக்பூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


