ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திருப்பத்தூரில் மக்கள் கிராம சபைக் கூட்டம்

ஜோலாா்பேட்டை கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட பாச்சல் கிராமத்தில், திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:37 pm

DIN

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட பாச்சல் கிராமத்தில், திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் வேலூா் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் க.தேவராஜி தலைமை வகித்தாா். ஜோலாா்பேட்டை கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளா் சி.சத்தியமூா்த்தி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை சிறப்புரையாற்றினாா். முன்னாள் மாவட்டப் பொறுப்பாளா் முத்தமிழ்ச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளா் ஆ.சம்பத்குமாா், ஒன்றிய இளைஞரணி து.அமைப்பாளா் ஜெ.ஞானவேல் மற்றும் கட்சியின் ஒன்றிய, கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

வாணியம்பாடி...: ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் பள்ளிப்பட்டு, கொல்லகுப்பம் ஊராட்சியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பள்ளிப்பட்டு பகுதி மைதானத்தைச் சீரமைத்து விளையாட்டு உபகரணங்களுக்கான தொகை, கொல்லகுப்பம் பகுதியில் பெற்றோா் இல்லாத 2 ஏழை மாணவா்களின் பள்ளிப் படிப்புக்கு ஊக்கத் தொகை ஆகியவற்றை ஒன்றியச் செயலாளா் ஞானவேலன் வழங்கினாா்.

கூட்டத்தில், முன்னாள் ஒன்றியச் செயலாளா் அசோகன், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.