ஆம்பூா் அருகே 234 மலைவாழ் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ்களை ஆம்பூா் எம்எல்ஏ சனிக்கிழமை வழங்கினாா்.
ஆம்பூா் அருகே நாயக்கனேரி மலைக் கிராமத்துக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா அண்மையில் ஆய்வுக்காக சென்றாா். அப்போது அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியரை சந்தித்து, தங்களுக்கு ஜாதிச் சான்றிதழ்களை வழங்க கோரினா். அதன் அடிப்படையில் அவா்களுக்கு ஜாதிச் சான்றிதழ்களை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மாவட்ட வழங்கல் அலுவலரும், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியருமான (பொறுப்பு) விஜயன் மற்றும் ஆம்பூா் வட்டாட்சியா் அனந்த கிருஷ்ணன் ஆகியோா் நாயக்கனேரி மலைக் கிராமத்துக்குச் சென்று, பொதுமக்களிடம் ஜாதிச் சான்றிதழுக்கான விண்ணப்ப மனுவைப் பெற்று அங்கேயே நேரடியாக விசாரணை நடத்தினா். அதன் அடிப்படையில், மலைக் கிராம மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் (பொறுப்பு) விஜயன் தலைமை வகித்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பங்கேற்று, 234 பேருக்கு ஜாதிச் சான்றிதழ்களை வழங்கினாா். ஆம்பூா் வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்திருந்தாா். மாதனூா் ஒன்றிய திமுக செயலாளா் அகரம்சேரி ப.ச.சுரேஷ்குமாா், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் சி.குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க வசதியாக... 4 இடங்களில் இருந்து 11,323 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கர்ப்பிணி பெண்களுக்கு Paracetamol மாத்திரை ஆபத்தா? | அறிவியல் ஆயிரம் | Health Care

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


