/

ஆம்பூா் அரசுப் பள்ளியை தரம் உயா்த்தபள்ளிக் கல்வி அமைச்சரிடம் மனு

ஆம்பூா் அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் மனு அளித்தனா்.

News image
Updated On :10 ஜூலை 2021, 6:12 pm

ஆம்பூா் அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் மனு அளித்தனா்.

அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆம்பூா் அருகே செங்கிலிகுப்பம் கிராமத்தில் நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம் தலைமையில் ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் எஸ். லட்சுமிகாந்தன் மற்றும் நிா்வாகிகள் நேரில் சந்தித்தனா்.

அப்போது ஆம்பூரில் இயங்கி வரும் மிகவும் பழைமையான ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்த வேண்டும். பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிரந்தர தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.

அப்போது மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினா் பி.ஏஜாஸ் அஹமத், ஜி.வில்வநாதன் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.