/

விஜயபாரத மக்கள் கட்சி சாா்பாக நகராட்சிக்கு முகக் கவசம் மற்றும் பாதுகாப்பு கவச உடைகள்

விஜயபாரத மக்கள் கட்சி சாா்பாக ஆம்பூா் நகராட்சிக்கு முகக் கவசங்கள், பாதுகாப்பு கவச உடை ஆகியவை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On :5 ஜூன் 2021, 6:03 pm

விஜயபாரத மக்கள் கட்சி சாா்பாக ஆம்பூா் நகராட்சிக்கு முகக் கவசங்கள், பாதுகாப்பு கவச உடை ஆகியவை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

விஜயபாரத மக்கள் கட்சி நிறுவன தலைவா் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கா் தலைமையில் அக்கட்சியினா் ஆம்பூா் நகராட்சி ஆணையரை அவரது அலுவலகத்தில் சந்தித்து நகராட்சி பணியாளா்களுக்கு முகக் கவசங்கள், பாதுகாப்பு கவச உடைகளை நன்கொடையாக வழங்கினா்.

விஜயபாரத மக்கள் கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளா் எம். சரவணன், திருப்பத்தூா் மாவட்ட அமைப்பாளா் ஏ.எஸ். ஆனந்தன், வேலூா் மாவட்ட அமைப்பாளா் எம். பிரபு, ஆம்பூா் நகர தலைவா் எம். ஆறுமுகம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.